நேற்றைய தினம் காங்கிரஸ் கூட்டத் தொடர் ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி joe biden, பாகிஸ்தான் தற்போது உலகிலுள்ள மிகப் பயங்கரமான நாடுகளில் ஒன்று எனவும் இது எந்த ஒரு பிடிப்பும் இன்றி அணு ஆயுதங்களை கொண்டுள்ள நாடு என்பதை அவதானிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அண்மையில் அமெரிக்கா வெளியிட்டுள்ள பாதுகாப்பு மூலோபாய திட்ட அறிக்கையில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் முக்கிய எதிரி நாடுகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த ஜோ பைடன் இந்த இரண்டு நாடுகளும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் நாடுகளாக இருந்தாலும் அவை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு உள்ளன.
ஆனால் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் அதேவேளை எந்த ஒரு பிடிமானமும் அற்ற நாடு என்பதால் தற்போது உலகில் மிக மோசமான அபாயகரமான நாடு பாகிஸ்தான் என நான் கருதுகிறேன் என கூறியுள்ளார்.
அண்மைக்காலங்களில் பாகிஸ்தான் அமெரிக்கா இடையே அதிகரித்துவரும் கூட்டுறவுகளிற்கு அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்து முக்கிய ஒரு பின்னடைவாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.