பாக்கிஸ்தானில் தற்போது மழை குறைந்து வருகின்ற நிலையில் மக்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் மிகவும் அவதியுற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் கருத்து வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ‘அன்ரனி குட்டேரியஸ்’ பாக்கிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றது.
உலக அமைப்புக்கள் உக்ரைன் போர் குறித்து எவ்வளவு கவனம் செலுத்துகின்றார்களோ, அந்தளவு முக்கியத்துவத்தை இயற்கை அழிவினால் பாதிக்கப்பட்ட பாக்கிஸ்தான் மீதும் செலுத்த வேண்டும்.
பாக்கிஸ்தானில் மக்கள் மிகவும் துன்பப்படுகின்றார்கள். நான் பாக்கிஸ்தானின் நிலைமைகளை நேரில் பார்வையிட செல்லுகின்றேன். உதவிகள் உடனடியாக தேவைப்படுகின்றது” என தெரிவித்திருக்கின்றார்.