Wednesday, December 25, 2024
HomeLatest Newsபாக்கிஸ்தான் – இந்தியா இணையாது! – அமைச்சர் உறுதி

பாக்கிஸ்தான் – இந்தியா இணையாது! – அமைச்சர் உறுதி

பாக்கிஸ்தான் – இந்தியா இடையே இருந்த வான் மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகள் 2019ஆம் ஆண்டு, இந்தியா ஜம்மு காஷ்மீர் பிரதேசத்திற்கான விசேட சட்டத்தை நிறைவேற்றியதில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த பாதைகளை இணைப்பது சாத்தியமா எனக் கேட்கப்பட்டதற்கு பதில் கூறிய பாக்கிஸ்தான் வான் போக்குவரத்து மற்றும் ரயில்வே துறை அமைச்சர் க்வாஜா சாட் ரஃபிக் குறிப்பிடும் போது,

இந்த இரண்டு நாடுகளின் பாதைகளையும் இணைப்பதற்கு எந்த ஒரு ஏற்பாடுகளும் இதுவரை இல்லை, எனக் கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டு சேவைகள் நிறுத்தப்படுவதற்கு முன்னர் நியூ டெல்லியில் இருந்து லஹோரிற்கு வாரம் இரண்டு விமானங்கள் பாக்கிஸ்தான் விமான நிறுவனத்தால் அனுப்பப்பட்டு வந்தது.

மேலும் 2019ஆம் ஆண்டில் புல்வாமா தாக்குதலில் 40 இந்திய படை வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட பதில் தாக்குதலில், பாக்கிஸ்தான் நாட்டிற்குள் சென்று, ஜைஷ் ஈ முகமத் அமைப்பின் கூடாரம் ஒன்றை தாக்கிய சம்பவத்தின் பின்னர், இரண்டு நாடுகளும் பாதைகளை இணைத்துக்கொள்ளும் முயற்சிகளை முற்றாகக் கைவிட்டிருந்தன.

Recent News