நேற்றைய தினம் கடலில் மூழ்கி தத்தளித்து இருந்த இந்திய மீனவர்கள் 6 பேரை காப்பாற்றி இந்தியாவிடம் கையளித்துள்ளது பாகிஸ்தான் கரையோர காவல் படை.
இதுதொடர்பாக பாகிஸ்தான் கரையோர காவல் படை வெளியிட்டிருந்த உத்தியோகபூர்வ ட்வீட் ஒன்றிலே இந்தியாவைச் சேர்ந்த 6 மீனவர்கள் இந்தியா பாகிஸ்தான் இடைப்பட்ட சர்வதேச கடல் பகுதியில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில், அங்கு சென்ற பாகிஸ்தான் ரோந்து படகுகள் அவர்களை காப்பாற்றி மீண்டும் இந்திய கரையோர காவல் படையிடம் கையளித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உணவு மற்றும் முதலுதவி வழங்கி சிறப்பாக கவனித்து இருந்தார்கள் என இந்திய மீனவர்கள் கூறியுள்ளனர். இதனை இந்திய கரையோர காவல் படை நன்றியுடன் பாராட்டி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 20 மீனவர்கள், 4 வருட சிறை தண்டனை அனுபவித்ததன் பின்னர் பாகிஸ்தானால் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.