காபந்து பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கர் ஒரு பிரத்யேக நேர்காணலின் போது இந்தியாவுடனான உறவை இயல்பாக்குவதற்கு காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறித்தியுள்ளார்.
ஐ.நா தீர்மானங்களுக்கு ஏற்ப அமைதியான தீர்வைப் பின்பற்றுவதை அவர் வலியுறுத்தினார்.
தெற்காசியாவில் அமைதி வாய்ப்பு மறுக்கப்பட்டால் உலகளாவிய நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் இந்தியாவுடன் போரை நாடவில்லை என்றும், காஷ்மீரை ஒரு முக்கிய பிரச்சினையாக முத்திரை குத்துவது மோதலுக்கான விருப்பத்தை குறிக்காது என்றும் கக்கர் தெளிவுபடுத்தினார்.
அத்தோடு 2019-ம் ஆண்டு 370-வது பிரிவை ரத்து செய்த இந்தியாவின் நடவடிக்கைக்குப் பிறகு உறவுகளில் ஏற்பட்ட திரிபு குறித்து கருத்துவெளியிட்ட அவர் இந்தியாவுடனான உறவுகளை மீட்டெடுப்பதற்கான முடிவை இந்தியாவின் தலைமை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதன்மூலம் உலக அரங்கில் ஒரு பொறுப்பான பங்காளியாக இருக்க பாகிஸ்தானின் விருப்பத்தை அவர் வலியுறுத்தினார்.