Friday, January 24, 2025
HomeLatest Newsயாழ்ப்பாணத்தில் ஓடித் திரியும் படையப்பா நீலாம்பரியின் கார் - குவியும் ரசிகர்கள்

யாழ்ப்பாணத்தில் ஓடித் திரியும் படையப்பா நீலாம்பரியின் கார் – குவியும் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜனி,சிவாஜி கணேசன் ,செந்தில்,ரம்மியா கிருஷ்னண் உள்ளிட்ட பல பிரபலங்களின் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் படையப்பா.

இந்தத்  திரைப்படம் அமோக வெற்றி பெற்றது.இப்போதும் தீபாவளி சிறப்பு திரைப்படமாக படையைப்பா திரைப்படத்தை பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன.இந்த திரைப்படத்தில் நடிகை ரம்மியா கிருஷ்ணன் (நீலாம்பரி) பயன்படுத்திய கார் இப்போது வரை பலருக்கு வியப்பை கொடுக்கும்.அந்தக் காரின் இரண்டு கதவுகளும் மேல் நோக்கி பறவையின் சிறகு போன்று வெளியே திறக்கும். பார்ப்பதற்கு மாஸாக இருக்கும்.

குறித்த படத்தில் பயன்படுத்தப்பட்ட காரின் வடிவத்தை ஒத்த பல மொடேன் கார்கள் இப்போது சந்தையில் உள்ளது.இந்த நிலையில் யாழ்ப்பாண நகர் பகுதியில் , குறித்த காரை ஒத்த தோற்றமுள்ள கார் ஒன்று யாழ்ப்பாண  வீதிகளில்  இப்போது உலா வருகிறது.

ஒரேஞ்சு நிறத்தில் உள்ள குறித்த கார்,வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவரால் யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பயன்படுத்தப்படுகிறது.இந்தக் காரை இப்போதும் பலர் வியந்து பார்வையிட்டு வருகின்றனர்.

குறித்த காரின் இரண்டு கதவுகளும் மேலே இறக்கை போல திறக்கும்.காரை பார்வையிட வருபவர்களுக்கும் ,காரின் உரிமையாளரும் சலிப்பு இல்லாமல் காரை காண்பித்து வருகின்றார்.

Recent News