இலங்கையின் யாழ் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பல முருகன் ஆலயங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் மாதகலில் அமைந்துள்ள நுணசை முருகன் ஆலயமும் ஒன்றாக திகழ்கின்றது.
நல்லூர் முருகனை அலங்கார கந்தன் என்றும் , சந்நிதி முருகனை அன்னதான கந்தன் என்றும் சிறப்பாக அழைப்பதை போன்று இந்த மாதகல் நுணசை முருகனை காவடிக் கந்தன் என சிறப்பாக அழைக்கின்றனர்.
காரணம் பல பக்த கோடிகளின் காவடிகள் வேண்டுதல்களின் நிமித்தமும் நேர்த்தியின் பிரகாரமும் இங்கு வருகை தருவதே ஆகும்.
அவ்வகையில், அண்மையில் இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்த கோடிகள் திரள மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
அங்கு தூக்கு காவடி , பறவை காவடி, செடில் காவடி , பால் காவடி மற்றும் அன்னக்காவடி என பலவகையான காவடிகள் பக்தர்களால் எடுக்கப்பட்டது.
அதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த விதமான வயது வேறுபாடுகளுமின்றி முருகனை மனதில் நிறுத்தி காவடிகளை எடுத்து தமது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
அதில் சகோதரர்களின் பாசத்தினை படம் பிடித்து காட்டும் விதமாக எடுக்கப்பட்ட பாச மலர்களின் காவடிகள் பார்ப்போரின் மனதை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.