Tuesday, December 24, 2024
HomeLatest Newsநிரம்பி வழியும் நோயாளிகள்: திணறும் டாக்டர்கள்!

நிரம்பி வழியும் நோயாளிகள்: திணறும் டாக்டர்கள்!

சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதனால் சீனாவில் அனைத்து மருத்துவமனைகளில் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வைத்தியசாலைகளில் நோயாளிகள் நிரம்பி வழிவது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சீனாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்குள்ள உள்ள மருத்துவமனைகள் படுக்கைகள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறையுடன் கடுமையான பணிகளை பணியார்கள் எதிர்கொள்கின்றனர்.

ஷென்சென் மருத்துவமனையில் காய்ச்சல் வெளிநோயாளர் பிரிவில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் கூறுகையில்,

எங்களிடம் போதுமான பணியாளர்கள் இல்லை. பரபரப்பான நாளில் 1,500க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்.

இதனிடையே சீனாவில் ஒரு நாளில் 49 லட்சம் முதல் 53 லட்சம் வரை புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பாதிப்பானது இன்று 10 சதவீதம் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கூறுகையில்,

சீனாவில் அடுத்த ஆண்டில் 10 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

இதேபோல் ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளது மீண்டும் கொரோனா தனது கோர முகத்தை காட்டும் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Recent News