Friday, January 17, 2025
HomeLatest NewsWorld Newsநமது இறைமை நமது கைகளில் தான் உள்ளது - ரஷ்யா குறித்து ஜேர்மன் திட்டவட்டம்

நமது இறைமை நமது கைகளில் தான் உள்ளது – ரஷ்யா குறித்து ஜேர்மன் திட்டவட்டம்

ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஷோல்ஸ் சனிக்கிழமை தனது நாடும் ஐரோப்பாவும் தங்களை திறம்பட தற்காத்துக் கொள்ள இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

ரஷ்யா-உக்ரைன் போரின் 2 வது ஆண்டு நிறைவு குறித்த வீடியோ செய்தியில், வன்முறையால் எல்லைகளை மாற்ற முடியாது என்ற கொள்கை மாஸ்கோவால் கடைபிடிக்கப்படுவதில்லை என ஷோல்ஸ் கூறினார்.

ரஷ்யா உக்ரைனைத் தாக்குவது மட்டுமல்லாமல், ஐரோப்பாவில் அமைதியையும் அழித்து வருகிறது, என ஷோல்ஸ் மேலும் குறிப்பிட்டார்: “உக்ரைனை தற்காத்துக் கொள்ள தேவையான வரை நாங்கள் ஆதரிப்போம் என்றும் கூறியுள்ளார் .

நாங்கள் எங்கள் கூட்டாளிகளுடன் மிகவும் வலுவாக இருக்க வேண்டும், யாரும் எங்களைத் தாக்கத் துணியவில்லை. அப்படித்தான் நாங்கள் எங்கள் பாதுகாப்பை உறுதிசெய்கிறோம் ஐரோப்பாவில் அமைதியைக் காக்கிறோம். இதற்கான எங்கள் சிறந்த உத்தரவாதமாக நேட்டோ இருக்கிறது என புகழாரம் சூட்டியுள்ளார் .

பல ஆண்டுகளுக்கு பிறகு ஜேர்மன் இராணுவம் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், டாங்கிகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏற்றுமதி செய்கிறது . இதனால் ஜேர்மன் ராணுவத்திற்கு நல்ல வருவாய் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Recent News