Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld News நம் நாட்டு ரத்தம் அகதிகளால் "விஷம்" ஆக்கப்படுகிறது - டிரம்ப் குற்றச்சாட்டு..!

 நம் நாட்டு ரத்தம் அகதிகளால் “விஷம்” ஆக்கப்படுகிறது – டிரம்ப் குற்றச்சாட்டு..!

அமெரிக்காவில் அடுத்த வருடம் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இருகட்சி ஜனநாயகம் நடைமுறையில் உள்ள அமெரிக்காவில், தற்போது பிரதமராக இருக்கும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் மீண்டும் அடுத்த வருட தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களம் இறங்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட உள்ள குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தின் டுர்ஹாம் (Durham) நகரில் ஒரு பேரணியில் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார்.
” ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பல கண்டங்களிலும் உள்ள பல நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு உள்ளே அகதிகள் குவிந்து வருகின்றனர். அவர்களால் நம் நாட்டு ரத்தம் விஷமாகி வருகிறது. அவர்கள் உலகம் முழுவதும் உள்ள மனநல காப்பகங்கள், சிறைச்சாலைகள் உள்ளிட்ட இடங்களை “விஷம்” ஆக்கி வருகின்றனர். மீண்டும் அதிபராக நான் தேர்வானால் இவ்வாறு லட்சக்கணக்கில் மக்கள் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் நுழைவதை முற்றிலும் ஒழித்து விடுவேன்.” என்று அந்த உரையில் டிரம்ப் கூறியுள்ளார்.

தனது பிரசாரம் முழுவதும் எல்லைகளை பலப்படுத்த, சட்ட விரோதமாக வரும் அகதிகளை தடுக்க மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்து வரும் டிரம்ப், ஏற்கெனவே கடந்த செப்டம்பரில் அகதிகளை “அமெரிக்க ரத்தத்தை விஷம் ஆக்குபவர்கள்” என தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News