Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsஜி7 மாநாட்டில் அனைவரையும் வரவேற்று இந்தியாவை வாழ்த்திய ஓரிஹைம் ரோபோ...!

ஜி7 மாநாட்டில் அனைவரையும் வரவேற்று இந்தியாவை வாழ்த்திய ஓரிஹைம் ரோபோ…!

ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின்போது ஓரிஹைம் என்ற ரோபோ இந்தியாவை வாழ்த்தியதுடன், அனைவரையும் வரவேற்றும் உள்ளது.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஜி7 உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா விடுத்த அழைப்பின் பேரில், இந்திய பிரதமர் மோடி கடந்த 19 ஆம் திகதி ஹிரோஷிமா சென்றடைந்தார்.

இதன் மூலம், அணுகுண்டு தாக்குதலால் மோசமாக பாதிக்கப்பட்ட உலகின் முதல் நகரமான ஹிரோஷிமாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜப்பான் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது என்பதை ஜி7 மாநாட்டில் காணமுடிந்துள்ளது. அதாவது அந்த மாநாட்டின்போது சர்வதேச ஊடக மையத்தில் ‘ஓரிஹைம்’ என்ற ரோபோ நிறுத்தப்பட்டிருந்தது.

அந்த ரோபோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன், இந்தியாவை வாழ்த்தியதுடன் நமஸ்தே, ஜப்பானுக்கு வந்த உங்களை வரவேற்கிறோம் எனவும் தான் வீடு அலுவலகங்களில் வேலை செய்வதாகவும் கூறியுள்ளது.

ஓரிஹைம் ஒரு செயற்கை நுண்ணறிவு ரோபோ அன்று. தனித்தனியாக பிரிந்திருக்கும் நபர்களை இணைப்பதுதான் இந்த சிரிய இயந்திரத்தின் வேலை. அந்த நபர் உங்களுடன் இருக்கிறார் என்ற உணர்வை ஓரிஹைம் ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News