Friday, November 15, 2024
HomeLatest Newsஎதிர்க்கட்சி தலைவர் கைது..!கலவர பூமியான நாடு..!9 பேருக்கு நேர்ந்த கதி..!

எதிர்க்கட்சி தலைவர் கைது..!கலவர பூமியான நாடு..!9 பேருக்கு நேர்ந்த கதி..!

எதிர்க்கட்சி தலைவர் சிறையில் அடைக்கப்பட்டதால் உருவான மோதலில் 9 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மான் சோன்கோ வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனால் உஸ்மான் சோன்கோவின் கட்சியினர் போராட்டம் நடத்தியமையால் தலைநகர் டக்கார் மற்றும் தெற்கில் உள்ள ஜிகுயின்ச்சோர் நகரில் பெரும் வன்முறை மூண்டுள்ளது.

அதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தமையால் வன்முறையை ஒடுக்கும் முயற்சியினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸாருக்கும், ஆதரவாளர்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அந்த மோதலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த மோதலினால் அந்த நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது. அதனை தொடர்ந்து சமூக ஊடக தளங்களுக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்த கலவரம் குறித்து உள்துறை மந்திரி, வன்முறையை தூண்டுவதற்காக போராட்டக்காரர்கள் பயன்படுத்திய சில சமூக ஊடக தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்றவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Recent News