Thursday, January 23, 2025
HomeLatest Newsலண்டனில் தமிழருக்கு கிடைத்த வாய்ப்பு...!

லண்டனில் தமிழருக்கு கிடைத்த வாய்ப்பு…!

லண்டனில் தமிழர் ஒருவர் குராய்டன் நகர துணை மேயராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவுன்சிலர் அப்பு தாமோதரன் சீனிவாசன் என்பவரே இவ்வாறு துணை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சென்னையை சேர்ந்த இவர், புலம்பெயர்ந்த இங்கிலாந்து நாட்டில் தமிழ் மொழி, கலை மற்றும் கலாசார வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வருகிறார்.

இதேவேளை இவர் பணியாற்றிய தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, தொழிலாளர் கட்சியில் உறுப்பினராக இருந்துள்ளார்.

அதன் மூலம் 2018 ஆம் ஆண்டு Kenley Ward இல் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவி மீண்டும் தமிழ் சமுதாயத்தின் மீதுள்ள பற்று, விடாமுயற்சியால் 2022 இல் தொழிலாளர் கட்சியின் சார்பாக Norbury Park என்ற Ward இல் போட்டியிட்டு கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் குராய்டன் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் ஆவார்.இவர் 17/05/2023 அன்று குராய்டன் நகர துணை மேயராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Recent News