Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsலடாக் எல்லைக்கு சுரங்கப்பாதை திறப்பு -எல்லையில் குவியப்போகும் படைகள்..!

லடாக் எல்லைக்கு சுரங்கப்பாதை திறப்பு -எல்லையில் குவியப்போகும் படைகள்..!

லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு இடையே அனைத்து இணைப்பையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மூலோபாய திட்டமான சோஜிலா சுரங்கப்பாதை 2030 டிசம்பருக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் மேம்பட்ட வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் சுரங்கப்பாதை அமைப்பு உள்ளது. சுரங்கப்பாதையின் திருத்தப்பட்ட நீளம் 13.15 கி.மீ என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த சுரங்கபாதையானது இரண்டு வழிச் சாலை சுரங்கப்பாதையாக இருக்கும் என கூறப்படுகிறது . இந்த சுரங்கப்பாதை திட்டம் முடிந்ததும், பயண நேரத்தை 3-4 மணிநேரத்திலிருந்து வெறும் 15 நிமிடங்களாகக் குறைக்க முடியுமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இராணுவ இயக்கத்தை எளிதாக்குவதுடன் இந்தியாவின் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.

அதேநேரம் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது எனபதும்,இது 2018 மே மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம் தொடங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News