Wednesday, January 22, 2025
HomeLatest Newsகாலிமுகத்திடலில் “ஆர்ப்பாட்ட செயலகம்” திறந்து வைப்பு

காலிமுகத்திடலில் “ஆர்ப்பாட்ட செயலகம்” திறந்து வைப்பு

அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 43 ஆவது நாளை எட்டியுள்ளதுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பதாதைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் இளைஞர்களால் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள பகுதியில், நேற்று இரவு போராட்டக்காரர்களால் “ஆர்ப்பாட்ட செயலகம்” திறந்து வைக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

இலங்கை வரலாற்றில் நீண்ட நாட்கள் முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக இந்தப் போராட்டம் பதிவாகியுள்ளது.

ஆனால் கட்சி சார்பற்ற மக்கள் கருத்துக்களை நாம் வெளியிடும்போது, அரசியல் தலையீடுகள் அதிகமாக காணப்படுவதுடன், இந்தப் போராட்டத்தை கலைக்க கீழ்த்தரமான செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.

சர்வகட்சி குழுவினர் போராட்டகாரர்களை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. அவ்வாறு யாரையும் போராட்டக்காரர்கள் சந்திக்கவில்லை. போராட்டக்காரர்கள் சர்வகட்சி குழுவினரிடம் ஆலோசனைகளை சமர்ப்பித்ததாகவும் தெரிவிக்கின்றனர். அது முற்றிலும் தவறானது.

நாம் முழு இலங்கையிலுள்ள மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆலோசனை அறிக்கை ஒன்றை தயாரித்து வருகிறோம். இரண்டு நாட்களில் அதனை வெளியிடவுள்ளோம் என போராட்டகாரர்கள் கூறியுள்ளனர்.

Recent News