Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsஉருகி உருகி காதலித்து கரம் பிடிப்போரே விவாகரத்து பெறுகின்றனர் - வெளியான தகவல்..!

உருகி உருகி காதலித்து கரம் பிடிப்போரே விவாகரத்து பெறுகின்றனர் – வெளியான தகவல்..!

ஒருவருக்கு ஒருவர் பிடித்து காதலித்து திருமணம் செய்தவர்களே அதிக அளவில் விவாகரத்து செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் காதல் திருமணம் செய்தவர்களே அதிக அளவில் விவாகரத்து கோருவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

விவாகரத்து தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு சென்றுள்ளது. அந்த வழக்கினை நீதிபதிகள் விசாரித்த பொழுது விவகாரத்து கோரியவர்கள் காதல் திருமணம் செய்தது கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, இரண்டு பேரையும் சமரசம் செய்து வைக்க நீதிபதிகள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், சமரசத்திற்கு கணவர் உடன்படவில்லை.

இந்நிலையில், விவாகரத்து கோருபவர்கள் 6 மாதம் காத்திருக்க வேண்டியது அவசியமில்லை என்ற தீர்ப்பின் அடிப்படையில் தம்பதிகளுக்கு உடனடியாக விவாகரத்தை வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, இந்தியாவில் காதல் திருமணம் செய்தவர்களே அதிக அளவில் விவாகரத்து கோருவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Recent News