Tuesday, March 11, 2025
HomeLatest Newsஇலங்கை நெருக்கடியை எதிர்கொண்டபோது இந்தியா மாத்திரமே உதவியது! – மோகன் பகவத்

இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டபோது இந்தியா மாத்திரமே உதவியது! – மோகன் பகவத்

இலங்கை மற்றும் மாலைதீவு நெருக்கடியில் இருந்தபோது ஏனைய நாடுகள் வணிக வாய்ப்புகளை தேடுவதில் ஆர்வம் காட்டியபோது இந்தியா மாத்திரமே உதவியதாக இந்திய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆன்மிகம் என்பது “இந்தியாவின் ஆன்மா” என ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) தொடர்புடைய அமைப்பான பாரத் விகாஸ் மஞ்ச் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையில் வர்த்தக வாய்ப்புகளை கண்டதும் தமது கவனத்தை திருப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை பிரச்சனையில் இருக்கும் போது, ​​இந்தியா மாத்திரமே ஆதரவு அளிக்கிறது என்றார்.

Recent News