Thursday, January 23, 2025
HomeLatest Newsநாய்களின் மன நிலையை அறிந்திருந்தால் ஒரு இலட்சம் பவுண்ட்..!முந்தியடிக்கும் விண்ணப்பதாரர்கள்..!

நாய்களின் மன நிலையை அறிந்திருந்தால் ஒரு இலட்சம் பவுண்ட்..!முந்தியடிக்கும் விண்ணப்பதாரர்கள்..!

வளர்ப்பு பிராணிகளை கவனித்துக் கொள்ளும் வேலைக்கு அதிகளவானோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, பிரித்தானியாவிலுள்ள பணக்கார குடும்பம் ஒன்று, தமது வளர்ப்பு பிராணிகளை பராமரிப்பதற்காக ஒரு இலட்சம் பவுண்ட் சம்பளத்துடன் வேலை வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளம் ஒன்றினுடாக அறிவித்துள்ளது.

அதில், விண்ணப்பதாரர்கள் வளர்ப்பு பிராணிகளுக்கான உணவுப் பொருட்களை கவனித்தல், கால்நடை மருத்துவருடன் சந்திப்புகள் திட்டமிடல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மாலை மற்றும் வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் உட்பட எப்பொழுது அழைத்தாலும் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றிற்கும் மேலாக ஆண்டுக்கு ஆறு வாரங்கள் விடுமுறை வழங்கப்படும் எனவும் தமது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நாய்களின் மன நிலை, உடல் நலம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றினை உறுதி செய்யக் கூடிய திறமை வாய்ந்த பணியாளர் வேண்டும் என்றும் குறித்த கோடீஸ்வரக் குடும்பம் நியமித்துள்ள நிறுவனம் கூறியுள்ளது.

இந்நிலையில், இந்த வேலைக்கு 400 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News