Wednesday, March 5, 2025
HomeLatest Newsவத்தளையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!

வத்தளையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வத்தளை, எலகந்த பிரதேசத்தில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்லுவ தெரிவித்தார்.

இதில் காயமடைந்த இளைஞர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

சம்பவத்தில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Recent News