Wednesday, December 25, 2024
HomeLatest Newsபிரிட்டன் அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ படம் வெளியீடு

பிரிட்டன் அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ படம் வெளியீடு

பிரிட்டன் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ புதிய குடும்ப படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது .

மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் ராணி கன்சோர்ட் கமீலா பார்க்கர் , இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் கொண்ட புகைப்படத்தை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது .

இந்த புகைப்படம் பற்றி வெளியிடப்பட்டிருக்கும் தகவலில் , மறைந்த ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நடைபெற்ற நாளுக்கு முந்தைய இரவில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது .

இந்த புகைப்படத்தை அரச குடும்பத்தின் அதி காரபூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரப்பட்டுள்ளது . இந்த புகைப்படத்தை புகைப்படக் கலைஞர் கிறிஸ் ஜாக்சன் எடுத்துள்ளார் . இந்தக் குடும்பப்படத் தில் இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேஹன் இடம்பெறவில்லை .

Recent News