Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsஒடிசா கோர விபத்து...!பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு...!

ஒடிசா கோர விபத்து…!பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு…!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒடிசா மாவட்டம் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த 2 ஆம் திகதி 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து இடம்பெற்றது.

இந்த கோர விபத்தில் 288 பேர் பலியாகியுள்ளதுடன்,1 000 ற்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சூழலில், இந்த ரயில் விபத்தில் படுகாயமடைந்து, பகனகா பஜார் நகரில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பீகாரை சேர்ந்த ஒருவர் ஜுன் 13 அன்று உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 289 ஆக அதிகரித்து.

மேலும் இன்றைய தினம் பீகாரை சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இது வரையிலும் 80 ற்கும் அதிகமான உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News