Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsஇனி குற்றால அருவிகளில் குளிக்கலாம்..!குதூகலத்தில் சுற்றுலாப் பயணிகள்..!

இனி குற்றால அருவிகளில் குளிக்கலாம்..!குதூகலத்தில் சுற்றுலாப் பயணிகள்..!

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை சுற்றுலா பயணிகளை குதூகலிக்க வைத்துள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், தற்பொழுது சீசன் களை கட்டியுள்ள நிலையில்,அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகின்றது.

இந்நிலையில், இரு தினங்களிற்கு முன்னர் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு பொலிஸார் தடை விதித்தனர்.

இந்த தடையினால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றமும், கவலையும் அடைந்தனர்.

இவ்வாறான சூழலில், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தமையால் அவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இன்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலாப் பயணிகள் குதூகலமடைந்துள்ளனர்.

Recent News