Tuesday, December 24, 2024
HomeLatest Newsசென்னையில் வெள்ளத்தையடுத்து தற்போது புதிய பிரச்சனை.

சென்னையில் வெள்ளத்தையடுத்து தற்போது புதிய பிரச்சனை.

வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக ஏற்பட்ட மழை இரு தினங்களுக்கு முன்னதாக ஓய்வு பெற்ற நிலையில் சென்னையில் மழை வெள்ளம் வடியாத சூழலில் தற்போது சென்னையில் பனிப்பொழிவு துவங்கியுள்ளது.

ஆந்திராவிலிருந்து வரும் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ஏற்படுகின்றமையால் வாகன சாரதிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் மற்றும் லொரிகள் உட்பட்ட வாகனங்களின் சாரதிகள் சிரமத்துக்குள் தள்ளப்படுகின்றனர்

பனிப்பொழிவு காரணமாக அருகிலுள்ள வாகனங்கள் தெரியாமல் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

மேலும் சென்னையில் பல இடங்களில் மின்சார தட்டுப்பாடுகள் உள்ளதால் மின்சாரம் இல்லாமல் பனிப்பொழிவில் வாகனங்களை முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Recent News