Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇனி பேருந்து பயணிகளுக்கும் QR முறைமை! - அமைச்சரின் விசேட அறிவிப்பு

இனி பேருந்து பயணிகளுக்கும் QR முறைமை! – அமைச்சரின் விசேட அறிவிப்பு

அரச பேருந்துகளில் பணம் செலுத்தாமல், QR அட்டை முறைமை மூலம் பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று இவ்வருட நிறைவுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட புதிய பேருந்துகளின் ஒரு தொகுதி, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள டிப்போக்களுக்கு இன்று (9) வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய, புதிய QR முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தி அதன்மூலம் பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கான புதிய பொறிமுறை அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recent News