சீனாவை சேர்ந்த ஜியாங் சோங்லி என்ற நபரினால் தொலைதூரத்திலிருக்கும் காதலர்கள் தங்களது உண்மையான முத்தங்களினை பரிமாறிக் கொள்வதற்காக remote Kissing device என்ற புதிய சாதனத்தை கண்டுபிடித்துள்ளார்.
இதனை சீனாவில் உள்ள சாங்கோ தொழிற்கல்வி எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில், உலகம் முழுவதுமுள்ள பயனர்களை மின்னணு முறையில் முத்தங்களினை அனுப்புவதற்கு இந்த சாதனம் அனுமதிக்குமாம்.
இந்த புது கண்டுபிடிப்பான ரிமோட் கிஸ் சாதனம் ஒரு ஜோடி சிலிகான் உதடுகளாகும், அதில் உள்ள அழுத்த உணரிகள் மற்றும் சிறிய மோட்டார்கள் ஆகியவை காதலர்களின் முத்தத்தின் அழுத்தம், இயக்கம் மற்றும் வெப்பநிலையை மீண்டும் உருவாக்க உறுதியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிமோட் கிஸ் டிசைன் குழுவின் தலைவரான ஜியாங் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழகத்தில் தானும் தனது காதலியுடன் தொலைதூர உறவில் இருந்ததாகவும், ஒருவரையொருவர் தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பு கொண்டதனாலேயே இந்த சாதனத்தினை உருவாக்க தோன்றியது எனத் தெரிவித்துள்ளார்.
ரிமோட் கிஸ் சாதனம் பயனரின் தொலைபேசியுடன் புளூடூத் மூலமாக இணைக்கப்படுவதன் மூலம் உலகத்தின் மறுபக்கத்தில் உள்ள ஒருவரை இந்த சாதனம் மூலம் ஸ்மூச் செய்ய முடியும்.
அத்தோடு இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து, இந்த சாதனத்தை தொலைபேசியுடன் இணைத்து, இதில் உள்ள சிலிகான் உதடுகளில் முத்தமிட்டால், பிரஷர் சென்சார் ஆக்சுவேட்டர் மூலம் உண்மையான முத்தத்தை இணையருக்கு வழங்க முடியும் என கூறப்படுகின்றது.
இந்த சாதனம் சீனாவில் ஷாப்பிங் தளமான Taobao மூலம் விற்பனைக்கு விட தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதன் விலை 288 யுவான் அதாவது £35 பவுண்ட் விலையாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம்.