ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான மிகக் கடுமையான போரில் ரஷ்யா உக்ரைன் நிலப்பரப்புக்களில் இருந்து பின்வாங்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் இதனால் ரஷ்ய தரப்பில் பல உயிர்ச் சேதங்கள் மற்றும் இராணுவ தளபாட சேதங்கள் என்பன ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சர்வதேச கடற் போக்குவரத்து பகுதியான கருங்கடல் பகுதி தற்போது வரை ரஷ்யாவின் முழுமையன கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ரஷ்யா கருங்கடல் வழியாகத் தான் உக்ரைன் மீது முதலாவது தாக்குதலை கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதனால் கருங்கடலை நோட்டோவின் பொதுவான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை நேட்டோ மற்றும் அமெரிக்க கூட்டு இணை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் கருங்கடல் பகுதியில் ரஷ்யா ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆபத்துக்கள் இருந்து கொண்டே இருக்கும் என்பதுடன் சர்வதேச கடற் பகுதயை ஒரு தனி நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கருங்கடலின் முழுமையன ஆதிக்கத்தை அமெரிக்காவும் நேட்டோவும் இணைந்து வைத்திருக்க வேண்டும் எனவும் அப்படி வைத்திருந்தால் தான் எதிர்காலத்தில் ரஷ்யாவின் ஆபத்துக்களில் இருந்து உக்ரைன் மற்றும் கீரிமியா போன்ற நாடுகளை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.