Wednesday, December 25, 2024
HomeLatest Newsஎதிர்வரும் நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பில் அறிவிப்பு!

எதிர்வரும் நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பில் அறிவிப்பு!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நாளை (18) மற்றும் நாளை மறுதினம் (19) ஆகிய தினங்களில் மூன்று மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் குழு CCக்கு காலை 6.00 மணி முதல் காலை 8.30 வரை இரண்டு மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு விதிக்கப்படும்,

அதேவேளை, M,N,O,X,Y,Z குழுக்களுக்கு காலை 5.30 முதல் காலை 8.30 வரை 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Recent News