Monday, December 23, 2024
HomeLatest Newsசர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்குரிய யோசனைகளை உடனடியாக முன்வைக்குமாறு அறிவிப்பு

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்குரிய யோசனைகளை உடனடியாக முன்வைக்குமாறு அறிவிப்பு

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில், உரிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றவுடன் அனைத்துக் கட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Recent News