Friday, January 24, 2025
HomeLatest Newsலிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை எதிர்நோக்கும் வெளிநாட்டு நாணய நெருக்கடிக்கு தீர்வாக, வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் இலங்கையில் உள்ள தமது அன்புக்குரியவர்களுக்காக லிட்ரோ எரிவாயுவை இணையவழி (ஒன்லைனில்) ஊடாக ஆர்டர் செய்யும் வசதியை லிட்ரோ எரிவாயு நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

கையடக்க தொலைபேசி (மொபைல் போன்) யை பயன்பாடுகள் மூலம் உலகின் எந்த நாட்டிலிருந்தும் லிட்ரோ எரிவாயுவை ஆர்டர் செய்யலாம், எனவே பின்வரும் செயலிகளுக்கு சென்று லிட்ரோ எரிவாயுவை ஆடர் செய்ய முடியும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

iOS: https://apple.co/3zesrlk அல்லது Android: https://bit.ly/3suuJsQ உள்ளீடுகளை அணுகுவதன் மூலம் Litro Gas ஐ ஆர்டர் செய்யும் வாய்ப்பும் தற்போது கிடைத்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய எரிவாயு தொகுதிகள் துறைமுகத்தை அடையும் வரை, எதிர்வரும் மாதங்களில் எரிவாயு விநியோகம் இருக்காது எனும் வதந்திகளை சிலர் பரப்ப ஆரம்பித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை குறைக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, சில விநியோகஸ்தர்களும் சரக்கு சேகரிப்பாளர்களும் எரிவாயுவை கொள்வனவு செய்யத் தயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிவாயுத் திருத்தம் குறித்த மற்றுமொரு அறிவிப்பு, சனிக்கிழமை வெளியிடப்படும் என்றும் உலக சந்தை நிலவரம் கடந்த மாதத்தைப் போலவே உள்ளதால், அதைக் கொண்டு தற்போதைக்கு விலைகளை கணிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்றையதினம் வரை உலக சந்தையின் எரிவாயு விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை என்று தெரிவித்த அவர், சில சந்தர்ப்பங்களில் எரிவாயு விலைகள் குறையாமல் அல்லது கூடாமல் அப்படியே நின்று விடுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தேவைக்கேற்ற எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் எனினும் நட்டம் ஏற்படும் என்று அஞ்சும் விநியோகஸ்தர்கள், சிலிண்டர்களை கொள்வனவு செய்து சேமிக்கத் தயங்குகின்றனர் என்றார்.

சில விநியோகஸ்தர்களின் நடத்தை குறித்து நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டதாகவும் தேவையான பங்குகள் அனுப்பப்பட்டு பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Recent News