Tuesday, December 24, 2024
HomeLatest Newsகனேடிய கடவுச்சீட்டை பெற காத்திருப்போருக்கான அறிவித்தல்

கனேடிய கடவுச்சீட்டை பெற காத்திருப்போருக்கான அறிவித்தல்

போலியாக விமான டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கனேடிய கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள காத்திருப்பவர்களுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய சமுக அபிவிருத்தி அமைச்சர் கரீனா கோட் (Karina Gould) மேற்கண்ட அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிலர் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கு குறுக்கு வழிகளை பயன்படுத்துவதாக தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

இவ்வாறு தேவையற்ற வகையில் அவசரப்படுவதனால் கடவுச்சீட்டு பெறுவதற்கான காத்திருப்பு பட்டியல் நீண்டு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

கடந்த சில மாதங்களாக கனடாவில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.

கடவுச்சீட்டு அலுவலகத்தினால் விண்ணப்பதாரிகளுக்கு கடவுச்சீட்டுகளை வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

தற்பொழுது கடவுச்சீட்டுக்காக காத்திருப்பு காலம் வெகுவாக குறைந்து விட்டதாகவும் கடவுச்சீட்டு விநியோக நடைமுறைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News