Friday, January 24, 2025
HomeLatest Newsஅசல் பெண்களுடன் அப்படி எல்லாம் நடக்கவில்லை தவறாகக் காட்டி விட்டார்கள்- அதிர்ச்சித் தகவலைக் கூறிய சாந்தி...

அசல் பெண்களுடன் அப்படி எல்லாம் நடக்கவில்லை தவறாகக் காட்டி விட்டார்கள்- அதிர்ச்சித் தகவலைக் கூறிய சாந்தி மாஸ்டர்!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6.பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

 போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சலித்தவர் இல்லை என்பதைக் காட்ட சிறப்பாக விளையாடி வருகின்றனர். மேலும் வீட்டிலிருந்த எலிமினேட் ஆகி அசல் மற்றும் சாந்தி ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் அண்மையில் பிரபல சேனல் ஒன்றிற்கு சாந்தி மாஸ்டர் பேட்டி அளித்திருந்தார்.

அதில், அசல் பற்றி பேசும்போது “இதில் அசல் வெளியேறும் பொழுது ஏன் வெளியேறுகிறார்கள் என்ற காரணத்தை முன் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கமல் கூறியிருந்தார் அதைத் தவிர வேறு எந்த போட்டியாளர்களும் கமல்ஹாசன் சொல்லவில்லை வெளி உலகை பொறுத்தவரை அசல் கோளாறு நிவாஷினி மற்றும் பெண்களுடன் நெருக்கமாக பழகிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன இதுபற்றிய கேள்வி சாந்தியிடம் எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சாந்தி, “நான் இருந்த இரண்டு வார காலத்தில் அப்படி எந்த விஷயத்தையும் பார்க்கவில்லை. இரண்டாவது வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகுதான் இவர்கள் (அசல், நிவாஷினி) இருவரும் தனியாக சென்று அமர்வது , உணவு உண்பது உள்ளிட்ட விஷயங்களை பார்க்க முடிந்தது. அது மற்றவர்களுக்கு ஃபோகஸ் ஆனது. ஆனால் அவர் பெண்களுடன் மட்டுமே நெருக்கமாக பழகியதாக எனக்கு படவில்லை. அவர் உண்மையில் மிகத் திறமை மிக்கவர், நான் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதில் இருந்தே அவருடைய திறமை குறித்து அவரிடம் கூறி கொண்டிருந்தேன்.

வெளிப்படையாக பேசுவது, பிடித்த – பிடிக்காத விஷயங்கள் பற்றி இயல்பாக சொல்வது என அனைத்திலும் நேரடியாகவே இருந்தார். ஆனால் அவர் வயதுக்கான சவுகரியமான இடத்தில்தானே அவர் பேச முடியும்? என்னுடனோ, முத்து அண்ணாவுடனோ, ராபர்ட் மாஸ்டருடனே அவர் பேச முடியாது.. எனவே அவருடைய வயதுக்காரர்களுடன் அவர் நெருக்கமாக இருந்தார். அது வெளியில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது குறித்து நானும் அதிர்ச்சி அடைந்தேன்.

அப்படி அசல் தவறாக பேசியதாகவோ, தொடுவதாகவோ இருப்பின், அவை தவறாக தெரிந்தால் அந்த பெண்களே புகார் அளித்திருப்பார்கள். நீங்கள் நன்றாக பார்த்தீர்கள் என்றால் அவர்கள் அனைவருமே அவருடன் நட்புடன் இருப்பதை காண முடிந்தது.  ஆனால் அவர்கள் கம்ஃபோர்டபிளாகவே உணர்ந்தனர். சிலருடைய பார்வையில் அது தவறாக தெரிந்திருந்தால், அது அவர்களுடைய கருத்தாக இருக்கலாம். நான் இருந்த இரண்டு வாரத்தில் நான் பார்த்ததில் அவ்வாறு எனக்கு தெரியவில்லை” என்று சாந்தி குறிப்பிட்டுள்ளார்.

Recent News