Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஅமெரிக்கா , கனடாவில்கூட இல்லை; 200 ஆண்டுகளின் பின் மெக்சிகோ ஜனாதிபதியாக பெண் !

அமெரிக்கா , கனடாவில்கூட இல்லை; 200 ஆண்டுகளின் பின் மெக்சிகோ ஜனாதிபதியாக பெண் !

மெக்சிகோ ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் கிளாடியா ஷெயின்பாம் 56 சதவீதத்துக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். இதன்மூலம் நாட்டின் முதல் ஜனாதிபதியாக அவர் பதவியேற்கவுள்ளார்.
61 வயதான Claudia Sheinbaum Mexico City இன் முன்னாள் மேயர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி Andrés Manuel Lopez இன் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர் ஆவார்.அதேவேளை மெக்சிகோ ஜனாதிபதி தேர்தலில் 200 ஆண்டுகள் கழித்து பெண் வேட்பாளர் வெற்றி என்ற பெருமையை கிளோடியா பெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு பின் தனது ஆதரவாளர்களிடம் பேசிய கிளாடியா,

“200 ஆண்டுகள் கடந்த பிறகு முதல் பெண் அதிபராக நான் ஆகப்போகிறேன்,” என்று தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.கிளாடியா வின் வெற்றி மெக்சிகோவுக்கு கிடைக்கும் பெரும் முன்னேற்றம் மற்றும் பாரம்பரிய மதிப்புகள் மற்றும் பெண்களுக்கான மரபு நிலைகளைக் காப்பாற்றிய நாட்டில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதேவேளை அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் இதுவரை பெண்கள் எவறும் வெற்றிபெறாத நிலையில் , மெக்சிகோ ஜனாதிபதிபதி வெற்றி பெற்ற முதல் பெண் என்ற பெருமையை கிளோடியா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News