உலகில் மிகவும் கட்டுப்பாடான நாடாகவும் வித்தியாசமான சட்டங்கள் நடைமுறையிலுள்ள நாடாகவும் காணப்படும் பியோங்பாங் வடகொரியாவில் பைபிள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு வயதுச் சிறுவன் உள்ளிட்ட குடும்பத்சைிறையில் அடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இந்த வகையில் வடகொரியவில் பைபிளுடன் அகப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இரண்டு வயது சிறுவன் உட்பட்ட குடும்பத்திற்கு ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தகவல் தமக்குக் கிடைத்துள்ளதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை இது தொடர்பான விரிவான அறிக்கைை அவர்கள் தாக்கல் செய்துள்ளனர். 2022 ம் ஆண்டிற்கான அமெரிக்கா வெளியுறவுத்துறையின் சர்வதேச மத சுதந்திர அறிக்கையின் படி வடகொரியாவில் இரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் முதல் 70000 பேர் வரையி்ல் கிறிஸ்தவர்களாக இருந்த காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் அங்குள்ள சிறை முகாம்களில் சிறை வைக்கப்படுகின்றனர். இவ்வாறான மனித உரிமை மீறல்களுக்கு அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சே பொறுப்பு என குறிதத அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்கா உட்பட்ட பல நாடுகளுக்கு தூதரக உறவு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் ஐ.நாவில் வடகொரியாவில் தொடரும்மனித உரிமை மீறல்களைக் கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அதரவு அளித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.