வடகொரியா அணு ஆயுத நாடு என்று கூறி வருகிறது.
அந்த வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன், இந்த முடிவைத் திரும்பப் பெற முடியாது என்றும், அணு ஆயுத ஒழிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.
புதிய சட்டம் நாட்டின் பாதுகாப்பிற்காக அணுகுண்டு தாக்குதல் நடத்தும் திறனையும் வலுப்படுத்தியுள்ளது.
கடுமையான தடைகளை மீறி 2006 முதல் 2017 வரை 6 அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தியமை குறிப்பிடத்தக்கது.