Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsவடகொரியாவில் தொடரும் சோதனைகள் - தம்மை ஆத்திரமூட்டுவதாக தென்கொரியா விசனம் !!!

வடகொரியாவில் தொடரும் சோதனைகள் – தம்மை ஆத்திரமூட்டுவதாக தென்கொரியா விசனம் !!!

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது.இன்று காலை 7.44 மணிக்கு இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்திய நிலையில், 37 நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் அறிக்கை ஒன்றில் தெரிவிதுள்ளது

ஜப்பானை ஒட்டியுள்ள கடற்கரையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருவது அந்த நாட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனையின்போது ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்திற்கும், ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையில் விழுகின்றன. இது அனைத்தும் ஜப்பான் பொருளாதார மண்டத்திற்கு வெளியில்தான் நடக்கிறது. இதனால் ஜப்பானுக்கு காயமோ, சேதமோ இல்லை என பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்திருந்தார்.

இன்று காலை ஏராளமான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்ததை கண்டறிந்துள்ளோம் என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.இது கொரிய தீவகற்பதின் மிரட்டல் எனவும் அவர்கள் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர். அமெரிக்கா உதவியுடன் எந்தவொரு ஆத்திரமூட்டும் செயலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

Recent News