கடந்த சில வருடங்களின் பின்னராக வடகொரியா மிகப்பெரிய மற்றும் நீண்ட தூரம் செல்லும் ‘ஹவாசோங் 17’ என்ற அதிநவீன ஏவுகணையை கடந்த 24ம் திகதி ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் கண்காணிப்பில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.
குறித்த அதிநவீன ஏவுகணை சோதனையை ஹாலிவுட் பட பாணியில் வீடியோபதிவாக வடகொரியா இராணுவம் வெளியிட்டுள்ளது. வீடியோபதிவில் ஜனாதிபதி கிம் ஜாங் உன் கறுப்பு நிற உடை மற்றும் கறுப்பு நிற கண்ணாடியை அணிந்து நடந்துவர அவருக்கு பின்னால் பிரமாண்ட ஏவுகணை ராணுவ வாகனத்தில் எடுத்து வரப்படுகிறது .பின்னர் கிம் ஜாங் உன் தனது கைக்கடிகாரத்தை பார்த்து கவுண்டன் சொல்வதாகவும் அதையடுத்து ஏவுகணை நெருப்பை கக்கியபடி விண்ணை நோக்கி சீறிப்பாய்கிறதுடன் ஏவுகணை சோதனை வெற்றியடைந்த பிறகு கிம் ஜாங் உன் இராணுவ வீரர்களுக்கு மத்தியில் சிரித்தபடியே நடந்து வருவது போல் வீடியோ பதிவில் காணப்படுகின்றது.
குறித்த அதிநவீன ஏவுகணை சோதனை செய்யப்பட்ட சம்பவம் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியடையவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.