வடகொரியா தற்போது உலக நாடுகளுக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒரு நாடாக உருவெடுத்து வருகின்றமை அவதானிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து கூட்டு செயற்பாடுகளில் ஈடுபடுவது வடகொரியாவிற்கு பாரிய மனஅழுத்தத்தை தோற்றுவித்துள்ளதாகவும் இதனால் வடகெரியா தன்னை ஒரு அணு ஆயுத நாடாக பிரகடனம் செய்துள்ளதாகவும் வடகொரியாவுடன் எந்த நாடு மோதினாலும் அணு ஆயுதம் கொண்டே பதில் சொல்லப்படும் என அந் நாட்டின் அதிபர் “கிம் ஜாங் உன்” தெரிவித்திருக்கின்றார்.
மேற்படி அறிவிப்பு உத்தியோகபூர்வ முறையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடகொரியாவின் இந்த அறிவிப்பினால் அமெரிக்கா உட்பட அயல் நாடுகள் அதிர்ச்சியில் இருப்பதாகவும் குறிப்பாக தென்கொரியாவின் நிலை மிக மோசமாக தென்படுவதாகவும் தெரிய வருகின்றது.
வடகொரியா எத்தனை அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றார்கள் என்பது இதுவரை தெரிய வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.