கடந்த சில மாதங்களாக கொரோனாவின் அதி வேக தாக்குதலுக்குட்பட்டு அவதியுற்றிருந்த வடகொரியா தற்போது பூரண விடுதலையை பெற்றுள்ளதாகவும், கொரோனா பரிசோதனைகள் மற்றும் முகக் கவசம் போன்றவற்றில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் வடகொரியாவின் தலைவர் “கிம் யோங் உன்” தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை வடகொரிய அறிவிக்கவில்லையாயினும் சர்வதேச ஊடகங்களின் மதிப்பின் படி குறைந்தது 4.77 மில்லியன் மக்கள் கோரோனாவினால் பாதிக்கப்பட்டு இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் நேற்றைய தினம் தலைவர் “கிம் யோங் யுன்” கோரோனாவின் தாக்கம் பூச்சிய நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இருப்பதை உறுதிப்படுத்தியதுடன் கொரோனாவின் அனைத்து கட்டுப்பாடுகளையும் வடகொரியா நீக்கிக் கொள்வதாகவும் அறிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.