Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஉளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியுள்ளதாக வடகொரியா அறிவிப்பு - அதிர்ச்சியில் தென்கொரியா…!

உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியுள்ளதாக வடகொரியா அறிவிப்பு – அதிர்ச்சியில் தென்கொரியா…!

ஏவுகணைகளை அடிக்கடி சோதனை செய்து பார்ப்பதை வடகொரிய வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக, நாங்கள் உளவு செயற்கைக்கோளை செலுத்த இருக்கிறோம் என ஜப்பானுக்கு தகவல் தெரிவித்தது.


இதனால், தென்கொரியா தங்களது கவலையை தெரிவித்தது. ஜப்பான் எல்லையில் உள்ள கடற்பகுதியில்தான் வடகொரிய ஏவுகணை சோதனை நடத்தும் என்பதால் தகவல் தெரிவித்தது.

இந்த நிலையில், உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, சுற்றுப்பாதையில் நுழைந்ததாக என வடகொரியா தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், கொரியா பதற்றம்-குறைப்பு ஒப்பந்தத்தின் ஒருபகுதியை சஸ்பெண்ட் செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, உளவு செயற்கைக்கோள் செலுத்தியதை ஜப்பான் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

ஜப்பான் உறுதிப்படுத்தாத நிலையில், நாங்கள் அதுகுறித்து மதிப்பீடு செய்து வருகிறோம் என பென்டகன் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் செயல் ஐ.நா. தீர்மானத்தை மீறியது மட்டுமல்லாமல், நமது நாட்டின் பாதுகாப்பிற்கான
பயங்கரமான ஆத்திரமூட்டல் செயல் என தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு கொள்கைக்கான துணை மந்திரி தெரிவித்துள்ளார்.


Recent News