Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsபட்டினியுடன் யாரும் நித்திரைக்குச் செல்லக்கூடாது ; அமிர்தசரஸில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு இலவச...

பட்டினியுடன் யாரும் நித்திரைக்குச் செல்லக்கூடாது ; அமிர்தசரஸில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு இலவச உணவு….!

சீக்கிய மதத்தின் இதயமாகக் கருதப்படும் வட இந்திய நகரமான அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தினமும் ஒரு இலட்சம் பேருக்கு உணவளிக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக அமிர்தசரவானது சுவையான உணவு , வரலாற்றுப் பழமை மிக்க நகரம் மற்றும் சீக்கியமத முக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ளதால் பல சிறப்புக்களுடனும் இருபது லட்சம் பேருக்கு மேலான சனத்தொகையையும் உள்ளடக்கியுள்ளது.

கடந்த 2021 ம் ஆண்டு கொரோனாவின் போது இந்தியா முழுவதுமாக வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களுக்காக ஆக்ஸியன் சிலிண்டர்களை வழங்குதல் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளை பாரியளவில் சீககியர்கள்மேற்கொண்டனர்என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதைவிட சீக்கியர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை மதத்தின் பெயரால் மேற்கொள்ளாது தினசரி.செயற்பாடாகவே மேற்கொண்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் அமிர்தசரஸ் நகரில் யிரும் பட்டினியில் தூக்கத்திற்குச் செல்லக்கூடாது என்ற நோக்கோடு பொற்கோயிலில் தினசரி உணவளிக்கப்பட்டு வருகின்றது.

இங்குள்ள சமையற்கூடம் உலகிலுள்ள மிகப்பெரிய சேவை அடிப்படையில் செயற்படும் சமையற்கூடமாக அமைந்துள்ளது. குறிப்பாக இங்கு சப்பாத்தி , பருப்பு வகைகள் , கொண்டைக்கடலை சுண்டல் , தயிர்சாதம் உள்ளிடட உணவுகள் அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை அனைவரும் சரி சமமாக தரையில் அமர்ந்தே உணவுண்ணும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதுடன் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருமுறையும் உணவருந்தும் இடம் தன்னாலர்வர்களால் தூய்மைப்படுத்தப்படுகின்றது.

குறிப்பாக சீக்கியர்களுக்கு கடந்த காலங்களில் வலி நிறைந்த வரலாறுகள் காணப்படினும் எதையும் தாங்கிக் கொள்ளும் சமூகமாக இன்றுவரை தன்னலமற்ற சேவை வழங்கலை பிரதானமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவற்றுடன் இவர்களிடம் பாரம்பரியாமாகத் தொடரும் தன்னலமற்ற பணிகளுக்கு தினமும் அமிர்தசரஸ் பொற்கோயிலில் உணவழித்துவரும் செயற்பாடானது சிறந்த முன்ணுதாரணமாகும்.

Recent News