Monday, January 20, 2025
HomeLatest Newsஒருவரும் தப்ப முடியாது – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நம்பர் பிளேட் ஸ்கேனர் ?

ஒருவரும் தப்ப முடியாது – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நம்பர் பிளேட் ஸ்கேனர் ?

எரிசக்தி அமைச்சு எரிபொருள் நிலையங்களில் வாகனங்களைக் கண்காணிப்பதற்கும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்களுடன் தரவுகளைப் பகிர்வதற்குமான செயலியை இன்று களத்தில் இறக்கியுள்ளது.

இந்த ஆப்ஸ் இன்று பல இடங்களில் பரிசோதிக்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இந்த ஆப்ஸ் இலங்கை காவல்துறையின் தகவல் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நுகர்வோரின் நம்பர் பிளேட் விபரங்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்வாங்கப்பட்டு, ஏனைய நிரப்பு நிலையங்களுக்கு பகிரப்படும்.

“நம்பர் பிளேட் உள்ளிடப்பட்டதும், அதே வாகனம் வேறு எந்த நிலையத்திலிருந்தும் அதே நாளில் எரிபொருளை பம்ப் செய்ததா போன்ற தகவல்களை அது தெரிவிக்கும்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Recent News