Monday, January 13, 2025
HomeLatest NewsIndia Newsகோடை காலத்தில் கறுப்பு கவுன் அணிய தேவையில்லை- மகிழ்ச்சியில் வழக்கறிஞர்கள்..!

கோடை காலத்தில் கறுப்பு கவுன் அணிய தேவையில்லை- மகிழ்ச்சியில் வழக்கறிஞர்கள்..!

கோடை காலம் முடியும் வரை வழக்கறிஞர்கள் கறுப்பு கவுன் அணிய தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளமை இந்திய வழக்கறிஞர்களை குதூகலிக்க வைத்துள்ளது.

கோடை காலம் ஆரம்பமாகி அதனால் வெய்யிலின் தங்கம் பார்க்க மிகவும் அதிகமாக இருப்பதால் மார்ச் முதல் ஜூலை மாதம் வரை வழக்கறிஞர்கள் கறுப்பு கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் பார் அசோசியேசன் என்ற வழக்கறிஞர் சங்கம் உச்சநீதிமன்றத்திற்கு கோரிக்கை கடிதம் வழங்குவது வழக்கம்.

அதனடிப்படையில் அண்மையில், உச்சநீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் இது தொடர்பான கோரிக்கை மனுவை கையளித்துள்ளனர்.

குறித்த மனுவானது அனைத்து நீதிபதிகளும் அடங்கிய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டுள்ளதுடன் அது குறித்த அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இதுகுறித்து சென்னை உச்சநீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “கோடைகாலம் வெய்யிலின் தாக்கம் போன்றவற்றை கருத்திற் கொண்டு வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை வழக்கறிஞர்கள் ‘கவுன்’ அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் கறுப்பு ‘கோட்’ மற்றும் கழுத்தில் வெள்ளை நிற பட்டை அணிவது கட்டாயம்” என்றும் கூறப்பட்டுள்ளது.

Recent News