Thursday, January 23, 2025
HomeLatest Newsஎரிபொருளுக்கு இனி நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை! – எரிசக்தி அமைச்சு

எரிபொருளுக்கு இனி நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை! – எரிசக்தி அமைச்சு

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை படிப்படியாக முடிவுக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் எதிர்வரும் மூன்று நாட்களில் எரிபொருள் ஏற்றிய அதிகமான கப்பல்கள் வரவுள்ளதால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக குறையும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டும் அடுத்த மூன்று நாட்களில் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Recent News