Wednesday, December 25, 2024
HomeLatest Newsசாரதி அனுமதிப்பத்திரத்திலும் இனி QR குறியீடு!

சாரதி அனுமதிப்பத்திரத்திலும் இனி QR குறியீடு!

இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிக்கும் QR குறியீட்டுடன் கூடிய புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) குசலானி டி சில்வா தெரிவித்தார்.

தற்போது இலங்கையர்களுக்கு நான்கு வகையான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும்போது, புதிய QR குறியிடப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் மார்ச் மாதத்தின் பின்னர் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கேட்டல் குறைபாடுள்ளவர்களுக்கான இலகுரக வாகன சாரதி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்னோடித் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த முன்னோடி திட்டத்தின் கீழ் 75 பேருக்கு பயிலுநருக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Recent News