Tuesday, December 24, 2024
HomeLatest Newsஃபைசர் தடுப்பூசி இனி இல்லை! சுகாதார அமைச்சு அறிவிப்பு

ஃபைசர் தடுப்பூசி இனி இல்லை! சுகாதார அமைச்சு அறிவிப்பு

ஃபைசர் தடுப்பூசியை இன்று முதல் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 6 லட்சம் பைசர் தடுப்பூசிகள் நேற்றைய தினத்துடன் காலவதியானமையே இதற்கான காரணம் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொவிட்-19 பரவக்கூடிய அதிக அவதானமிக்க 60வயதுக்கு மேற்பட்ட 27 லட்சம் பேர் உள்ளனர். எனினும், இரண்டு லட்சம் பேரே பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், காலாவதியான பைசர் தடுப்பூசிகளை விரைவில் அழிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியான 17 பேர் அடையாளங் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 71 ஆயிரத்து 70 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் கொவிட்-19 காரணமாக நேற்று முன்தினம் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recent News