இந்த 2023ஆம் ஆண்டு ஒரு அரிசி மணியைக் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு பருவம் தோல்வியடைந்ததன் காரணமாக 2022ஆம் ஆண்டு அரிசி இறக்குமதிக்காக 400 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டதாகவும், ஆனால் இம்முறை அவ்வாறானதொரு நிலை ஏற்படாது எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் 100 வீதமான நெற்செய்கை இந்தப் பருவத்தில் பயிரிடப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
விவசாய அமைச்சினால் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இப் பருவத்தில் நெற்செய்கைக்குக் கிடைக்கும் நெற்செய்கையின் அளவு 08 இலட்சம் ஹெக்டேயர், மேலும் பயிரிடப்பட்டு இன்னும் பயிரிடப்பட்டு வரும் நெற்செய்கையின் அளவு 760,000 ஹெக்டேரைத் தாண்டியுள்ளது.