Sunday, January 26, 2025
HomeLatest Newsபணம் இல்லை; 32 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பல்!

பணம் இல்லை; 32 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பல்!

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்டுவரப்பட்ட கப்பல், 32 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பலானது கடந்த மாதம் 10ஆம் திகதி நாட்டை அண்மித்த நிலையில், இதுவரையில் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை.

இந்நிலையில், கொழும்பு துறைமுகத்தை அண்மித்து நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கான கட்டணத்தை இதுவரை செலுத்த முடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள எக்ஸ்ரோ எனப்படும் இந்த மசகு எண்ணெய் ஊடாக டீசல் மற்றும் பெட்ரோலை அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Recent News