Monday, December 23, 2024
HomeLatest Newsமூன்று நாட்களுக்கு எரிபொருள் இல்லை..! பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிரடித் தீர்மானம்

மூன்று நாட்களுக்கு எரிபொருள் இல்லை..! பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிரடித் தீர்மானம்

எரிபொருள் விலை குறைவடையும் என எதிர்பார்த்து எரிபொருளை முன்பதிவு செய்யாத எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு தண்டனையாக மூன்று (3)நாட்களுக்கு எரிபொருளை வழங்குவதில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமென தகவல் வெளியாகியிருந்தமையினால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தேவையாக எரிபொருளை முன்பதிவு செய்யவில்லை.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு, சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகளும் காணப்பட்டுள்ளன.

இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாவுதுன்ன கூறியுள்ளார்.

இதேவேளை ,விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் தீர்மானங்களே இந்த நிலைமைக்கு காரணம் என பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல கூறியுள்ளார்.

பிற செய்திகள்

Recent News