Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsநிர்வாணம் வேறு ஆபாசம் வேறு...!இரண்டையும் இணைக்க கூடாது..!நீதிமன்றம் அதிரடி..!

நிர்வாணம் வேறு ஆபாசம் வேறு…!இரண்டையும் இணைக்க கூடாது..!நீதிமன்றம் அதிரடி..!

நிர்வாணத்தை ஆபாசத்துடன் இணைக்கக் கூடாது என நீதிமன்றம் கருத்து வெளியிட்டுள்ளமை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கேரளாவின் சமூக ஆர்வலரான ரெஹானா பாத்திமா என்பவர் தனது அரை நிர்வாண படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

அது மட்டுமன்றி, அவர் அரை நிர்வாணமாக இருக்கும் வேளையில் அவரது உடலில் அவருடைய மைனர் குழந்தை ஓவியம் தீட்டுவது போன்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

குறித்த வீடியோவானது கேரளாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில் ரெஹானா பாத்திமா மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இவர் மீதான வழக்கு நேற்றைய தினம் கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததுள்ளது.

அதன் போது வழக்கினை விசாரித்த நீதிமன்றம் நிர்வாணத்தை ஆபாசத்துடன் இணைக்கக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளதுடன், ரெஹானா பாத்திமா மீதான போக்சோ வழக்கையும் தள்ளுபடி செய்ததுள்ளது.

Recent News