Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅடுத்தவாரம் சிவனொளிபாத மலையின் பருவகாலம் ஆரம்பம்!

அடுத்தவாரம் சிவனொளிபாத மலையின் பருவகாலம் ஆரம்பம்!

எதிர் வரும் பௌர்ணமி தினத்துடன் சிவனடி பாதமலை பருவ காலம் ஆரம்பிக்கபட உள்ளது, என சிவனடிபாத மலைக்கு பொறுப்பான பீடாதிபதி பெங்கமு தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் எதிர் வரும் 6 ம் திகதி காலை இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் இருந்து மூன்று வழிகளில் சுவாமிகள் சிவனடிபாத மலைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்து உள்ளதாகவும், கல் பொத்தா வலையிலிருந்து பொகவந்தலாவ வழியாகவும்,  இரத்தினபுரி பெல்மடுள்ள வழியாகவும், இரத்தினபுரி அவிசாவளை, தெகியோவிற்ற , யட்டியாந்தொட்ட, கரவனல்ல, கித்துல்கல,கினிக்கத்தேன ,வட்டவளை, ஹட்டன்,டிக்கோயா, நோர்வூட், மஸ்கெலியா வழியாக நல்லதண்ணி நகரை நோக்கி சுவாமிகள் சென்று அங்கு இருந்து இராணுவ அதிகாரிகள் சுவாமிகளை மலை உச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்து உள்ளதாகவும்.

அதன் பின்னர் அங்கு சுவர்கள் பிரதிஷ்டை செய்து பின்னர் 7 ம் திகதி அதிகாலை பிரித் ஓதும் வைபவம் நடைபெறும்.

அதன் பின்னர் 2022 /2023 சிவனடி பாதமலை பருவ காலம் ஆரம்பிக்க பட்டு 2023 மே மாதம் வைகாசி விசாகம் பௌர்ணமி தினத்துடன் நிறைவு பெறும்.

இக் காலத்தில் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் மற்றும் பாதசாரிகள் சிவனடிபாத மலைக்கு வந்து தரிசனம் செய்ய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்து உள்ளனர்.

பாதுகாப்பு.மின்சாரம்.குடிநீர்.வர்த்தக நிலையங்கள் சுகாதார வசதிகள்.மற்றும் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்ய பட்ட நிலையில் உள்ளது.

யாத்திரிகர்கள் தரிசனம் செய்ய வரும் போது பிலாஸ்டிக் போத்தல்கள் பொலித்தீன் (முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது) இவற்றை எடுத்து வர வேண்டாம் என கேட்டுக் கொள்ள படுகின்றனர்.

Recent News